ADDED : ஏப் 11, 2025 06:11 AM

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலப்பாலையூர், சி.கீரனுார், மருங்கூர், கீழ் புளியங்குடி, மேல் புளியங்குடி கிராமங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது.
இப்பகுதிகளில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று பணிகளை பார்வையிட்டார்.
இதில் மேலப்பாலையூர் ஊராட்சியில் ஜன்மன் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகள், விளையாட்டு மைதானம், நர்சரி கார்டன் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, கலைஞர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் குடியிருப்புகள், துணை சுகாதார வளாக கட்டடம், மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுமான பணி உட்பட அனைத்து பணிகளையும் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
பி.டி.ஓ.,க்கள் செந்தில் வேல்முருகன், வீராங்கன், தாசில்தார் இளஞ்சூரியன், உதவி செயற்பொறியாளர்கள் செல்வம், அனுசுயாதேவி, ஜெயச்சந்திரன், பணி மேற்பார்வையாளர்கள் உடன் இருந்தனர்.