/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.5.77 கோடியில் வளர்ச்சி பணிகள் அமைச்சர் கணேசன் பெருமிதம்
/
ரூ.5.77 கோடியில் வளர்ச்சி பணிகள் அமைச்சர் கணேசன் பெருமிதம்
ரூ.5.77 கோடியில் வளர்ச்சி பணிகள் அமைச்சர் கணேசன் பெருமிதம்
ரூ.5.77 கோடியில் வளர்ச்சி பணிகள் அமைச்சர் கணேசன் பெருமிதம்
ADDED : டிச 27, 2024 06:32 AM

சிறுபாக்கம்,: சிறுபாக்கம் அருகே ரூ. 5.77 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கணேசன் பேசினார்.
சிறுபாக்கம் அடுத்த அடரியில் புதிய ஊராட்சி அலுவலகம் திறப்பு விழா நடந்தது. கூடுதல் கலெக்டர் சரண்யா தலைமை தாங்கினார். மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர், தி.மு.க., ஒன்றிய செயலர் சின்னசாமி, அட்மா குழு தலைவர் செங்குட்டுவன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் அனிதா வரவேற்றார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், ஊராட்சி அலுவலகத்தை திறந்து வைத்து பேசுகையில், முதல்வர் ஸ்டாலின் கிராமங்கள் தோறும் பல வளர்ச்சி திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் களத்தூர், காஞ்சிராங்குளம், ரெட்டாக்குறிச்சி, மாங்குளம் கிராம மக்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும். அடரி ஊராட்சியில் ரூ., 5.77 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
விருத்தாசலம் ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத், வேப்பூர் தாசில்தார் மணிகண்டன், மங்களூர் பி.டி.ஓ.,க்கள் தண்டபாணி, வீராங்கன், மங்களூர் தி.மு.க., ஒன்றிய செயலர் அமிர்தலிங்கம், தி.மு.க., நிர்வாகிகள் வெங்கடேசன், நிர்மல், ராமதாஸ், சுப்ரமணியன், மருதமுத்து, ராமலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.