/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.3.25 கோடியில் வளர்ச்சி பணிகள்
/
ரூ.3.25 கோடியில் வளர்ச்சி பணிகள்
ADDED : நவ 21, 2025 05:35 AM

நெய்வேலி நவ.21-: நெய்வேலி தொகுதிக்குட் பட்ட காட்டுக்கூடலுார் ஊராட்சியில் தேசிய நெடுஞ்சாலை துறையின் கீழ் 2 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில், 2 கி.மீ., சாலை அகலப்படுத்துவதற்கான பணிகள், நடுக்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளியில் தமிழக அரசின் மாவட்ட கனிம வளத்துறை நிதியின் கீழ் ரூ.34.70 லட்சம் மதிப்பீட்டில், 2 வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டடம் கட்டுவதற்கான பணிகள், குடியிருப்பு முதல் கருக்கை வரை ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்துவதற்கன பணிகளை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், பி.டி.ஓ., மீராகோமதி, பொறியாளர் சங்கர், நெய்வேலி தொகுதி பார்வையாளர் துரைசாமி பண்ருட்டி முன்னாள் ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் புகழேந்தி பண்ருட்டி தெற்கு ஒன்றிய துணை செயலாளர் சுமதி நந்தகோபால், மாவட்ட பிரதிநிதி ஜெகநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாரி, புருஷோத்தமன், சிவமணி, முன்னாள் கவுன்சிலர்கள் ஞானசேகர் அருள்முருகன் நெய்வேலி நகர இளைஞரணி அமைப்பாளர் ஸ்டாலின் அரிகிருஷ்ணன் சிவமணி ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

