/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தகிரீஸ்வரர் கோவில் நந்தவனம் சீரமைக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு
/
விருத்தகிரீஸ்வரர் கோவில் நந்தவனம் சீரமைக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு
விருத்தகிரீஸ்வரர் கோவில் நந்தவனம் சீரமைக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு
விருத்தகிரீஸ்வரர் கோவில் நந்தவனம் சீரமைக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 25, 2025 08:27 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் நந்தவனத்தை சீரமைத்து பூங்கா அமைக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருத்தாசலத்தில் பழமையான விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. மாசி மகம், ஆடிப்பூரம் உட்பட ஆண்டுதோறும் திருவிழாக்கள் விசேஷமாக நடக்கிறது. பிரதோஷம், கிருத்திகை, சஷ்டி போன்ற வாராந்திர பூஜைகளும் சிறப்பாக நடக்கிறது. தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.
பக்தர்கள் வரும் வாகனங்கள், நான்கு மாட வீதிகளில் தாறுமாறாக நிறுத்தப்படுவதை தவிர்க்கும் வகையில் கோவில் எதிரில் உள்ள நந்தவனம் பார்க்கிங்காக மாற்றப்பட்டது. தற்போது கார், வேன், பைக் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி, பாழாகிறது.
மேலும் பார்க்கிங் வளாகம் முழுவதும் பொது மக்கள் திறந்தவெளியில் இயற்கை உபாதைக்கு பயன்படுத்துவதால் துர்நாற்றம் வீசுகிறது. மாறாக, நந்தவனத்தை சீரமைத்து பூக்கள், பழங்கள் நிறைந்த செடிகளை பராமரித்து, சிறுவர் பூங்கா அமைக்கலாம். கோவிலுக்கு வருவோர் மாலை நேரத்தில் விளையாடி மகிழவும், பொழுதுபோக்கவும் வசதியாக இருக்கும்.
வெளியூர் பக்தர்களும் மகிழ்ச்சி அடைவர். இது குறித்து ஹிந்து அறநிலையத்துறை நிர்வாகம் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.