/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டி.ஜி.எம்., பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு
/
டி.ஜி.எம்., பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : மே 20, 2025 07:06 AM

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு டி.ஜி.எம்., பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
சேத்தியாத்தோப்பு டி.ஜி.எம்., மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மாணவி சுபாஷினி 576 மதிப்பெண், பிளஸ் 1 தேர்வில் மாணவி வர்ஷா 582 மதிப்பெண் பெற்று முறையே முதலிடம் பிடித்தனர். 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர் ேஷக் அப்துல்லா, மாணவி கிருத்திகா ஆகியோர் 487 மதிப்பெண் எடுத்து முதலிடம், மாணவி ஜனனி 482 மதிப்பெண் எடுத்து இரண்டாமிடம், மாணவி அனிஷாவர்த்தினி 475 மதிப்பெண் எடுத்து மூன்றாமிடம் பிடித்தனர்.
தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. பள்ளி நிர்வாகி ராமச்சந்திரன் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். தலைமை ஆசிரியர்கள் நன்மாறன், அசோக்குமார் உடனிருந்தனர்.