ADDED : நவ 12, 2026 07:22 PM

கடலுார்: பெரம்பலுார் தனலட்சுமி சிட்ஸ் நிறுவன பொது மேலாளர் ஜெயராமன் இல்ல திருமண வரவேற்பு விழா புதுச்சேரியில் நடந்தது.
பெரம்பலுார் தனலட்சுமி சிட்ஸ் நிறுவன பொது மேலாளர் ஜெயராமன்–ருக்மணி தம்பதி மகன் இன்ஜினியர் ஜெயபிரகாஷ், திருச்சி டாக்டர் ரவிச்சந்திரன்–சவுபாக்கியவதி தம்பதி மகள் இன்ஜினியர் ரஷ்வினி திருமண வரவேற்பு விழா புதுச்சேரி சங்கமித்ரா கன்வென்ஷன் ஹாலில் நேற்று (நவ.,11) நடந்தது.
தனலட்சுமி சீனிவாசன் குழும தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கி, திருமணத்தை நடத்தி வைத்தார். ஜெயராமன்–ருக்மணி ஜெயராமன், ரவிச்சந்திரன்–சவுபாக்கியவதி ரவிச்சந்திரன், அச்சுதன், டாக்டர் அபிநயா ஜெயராமன் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, மணமக்களை வாழ்த்தினார். அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், வர்த்தக பிரமுகர்கள், தனலட்சுமி குழும நிர்வாகிகள், உறவினர்கள், நண்பர்கள் என பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
