/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வைர நகை கண்காட்சி கடலுாரில் இன்று நிறைவு
/
வைர நகை கண்காட்சி கடலுாரில் இன்று நிறைவு
ADDED : ஆக 10, 2025 02:48 AM

கடலுார் : துச்சேரி காரட்லேன் ஜூவல்லரி சார்பில் கடலுாரில் வைர நகை கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.
கடலுார், ஆற்காடு உட்லண்ட்ஸ் ஓட்டலில் காரட்லேன் சார்பில் வைர நகை கண்காட்சி கடந்த 8ம் தேதி துவங்கியது. கண்காட்சியில் தினசரி உபயோகப்படுத்தக்கூடிய எடை குறைவாக உள்ள ஜுவல்லரி கலெக் ஷன் உள்ளன.
வைர நகைகளுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. கம்மல், செயின், வளையல், மோதிரம் பிரேஸ்லெட் விற்பனை செய்யப்படுகிறது. பழைய தங்க நகைகளை மாற்றுவதற்கு 100 சதவீதம் வரை பணம் திரும்ப தரப்படுகிறது.
ஒன்பது மாத நகை சேமிப்பு திட்டத்தில் கடைசி மாதம் தவணையை கடைகளே ஏற்கும். வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் நகைகளை எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றி புதிதாக பெறலாம்.
இங்கு, வாங்கிய நகைகளை இங்கேயே மீண்டும் விற்பனை செய்ய முடியும். விருப்பமான நகையை தேர்வு செய்ய அணிந்து பார்த்து முடிவு எடுக்கலாம். கண்காட்சி இன்று நிறைவு பெறுகிறது என, நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.