ADDED : ஏப் 07, 2025 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே அனுமதியின்றி வீட்டில் டீசல் பதுக்கி வைத்து விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடம் அடுத்த முருகன்குடியைச் சேர்ந்தவர் சங்கர் சலீம்,45; இவர், எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய டீசலை வீட்டில் பதுக்கி விற்பதாக, பெண்ணாடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சென்ற சப் இன்ஸ்பெக்டர் பொட்டா தலைமையிலான போலீசார் வீட்டில் ஆய்வு செய்தனர்.
அப்போது, விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 25 லிட்டர் டீசலை பறிமுதல் செய்தனர். உடன், போலீசார் சங்கர் சலீமை கைது செய்தனர்.

