
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி; திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி., திஷா மிட்டல் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பதிவேடுகளை பார்வையிட்டு, குற்ற வழக்கில் தலைமறைவாக உள்ள நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
விபத்துகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து போலீசாரிடம் குறைகளைக் கேட்டறிந்தார். ஆய்வின்போது திட்டக்குடி இன்ஸ்பெக்டர் அருள்வடிவழகன், சப் இன்ஸ்பெக்டர் சுபிக்ஷா உடனிருந்தனர்.

