ADDED : செப் 11, 2026 06:43 PM
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் ஆத்மா திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப பயன்பாடுகள் மற்றும் டிஜிட்டல் விவசாயம் குறித்த சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.
முகாமிற்கு, வேளாண் உதவி இயக்குனர் முகமது நிஜாம் தலைமை தாங்கினார்.
வேளாண் அறிவியில் நிலைய தலைவர் நடராஜன், மின்னணு செயலிகளின் முக்கியத்துவம், அவற்றின் மூலம் தரமான விதைகள் பெறுவது குறித்த விபரம், பயிர் மேலாண்மை, பயிர் பாதுகாப்பு முறைகள் மற்றும் அக்ரி டெக் போர்ட்டல் இணையதள பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார்.
வேளாண் அலுவலர் சுகன்யா, உழவன் செயலி, கிரஹி மேப்பர் அக்ரி ஸ்டாக் மற்றும் டி.சி.எஸ் செயலி ஆகியவற்றின் சிறப்புகள், வேளாண் தேவைகளுக்கு அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது குறித்து விளக்கினார்.
முகாமில், வட்டார தொழில்நுட்ப மேலாளர் உமா மகேஸ்வரி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மதிவாணன், தேவேந்திரன் ஆகியோர் விவசாயிகளின் கைபேசியில் தேவையான வேளாண் செயலிகளை பதிவிறக்கம் செய்து பதிவு செய்து கொடுத்தனர்.
முகாமில், விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.
