ADDED : டிச 15, 2025 06:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் கிழக்கு மாவட்ட அ.ம.மு.க., சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் தினகரன் பிறந்த நாள் விழா நடந்தது.
மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் , புதுப்பாளையம் தரைகாத்த காளியம்மன் கோவிலில் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் , இனிப்பு வழங்கினர்.
நிகழ்ச்சியில் ஜெ., பேரவை துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர்கள் வேல்முருகன், சிவகாமி, மாவட்ட பேரவை செயலாளர் முருகன், பகுதி செயலாளர்கள் தீபா, காதர், சம்பத், பொதுக்குழு உறுப்பினர் கல்யாணராமன், அருள்செல்வன், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் கந்தவேல், ஜெனித், மணிவண்ணன், ராதாகிருஷ்ணன், முருகையன், ரமேஷ், செல்வம், ஆறுமுகம், ஜெய்கணேஷ், இளையராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

