/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தினமலர் செய்தி எதிரொலி கொள்முதல் நிலையம் திறப்பு
/
தினமலர் செய்தி எதிரொலி கொள்முதல் நிலையம் திறப்பு
ADDED : ஜன 12, 2025 06:42 AM

நெல்லிக்குப்பம் : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால், நெல்லிக்குப்பத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
நெல்லிக்குப்பம் பகுதியில், கடந்த 4 ஆண்டுகளாக அரசின் கொள்முதல் நிலையம் செயல்பட்டதால் விவசாயிகள் பெரிதும் பயனடைந்து வந்தனர். தற்போது, சம்பா பட்ட நெல் அறுவடை துவங்கியுள்ளது. ஆனால் அரசின் நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால், தனியார் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்துக்கொண்டு குறைவான விலைக்கு கொள்முதல் செய்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிட்டு, விவசாயிகளின் பாதிப்பு சுட்டிகாட்டப்பட்டது.
அதையடுத்து, நேற்று கொள்முதல் நிலையத்தை திறக்க மண்டல மேலாளர் விஸ்வநாதன் உத்தரவின்பேரில் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.