/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டி திருவள்ளுவர் பள்ளியில் 'தினமலர் பட்டம்' வினாடி வினா போட்டி

ADDED : டிச 22, 2024 09:29 AM

பண்ருட்டி: புதுச்சேரி 'தினமலர் பட்டம்' இதழ் மற்றும் ஆச்சார்யா கல்வி குழுமம் இணைந்து நடத்தும், ' பதில்சொல் பரிசு வெல்' மெகா வினாடி வினா போட்டியின் , பள்ளி அளவிலான போட்டி பண்ருட்டி திருவள்ளுவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் கலைவாணி தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் தேவி முன்னிலை வகித்தனர். போட்டியில் 6 ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை பயிலும்300 மாணவர்கள் பங்குபெற்றனர்.
முதல்நிலை தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 16 பேர் இறுதி சுற்று போட்டிக்கு தேர்வாகினர். இதில், 8 அணிகளாக பிரித்து இறுதி சுற்று போட்டி நடந்தது.
பிளஸ் 1 மாணவிகள் நித்யாஸ்ரீ , பாலபாரதி முதலிடம் பெற்றனர். 7 ம் வகுப்பு மாணவர் அஸ்ரா, 9 ம் வகுப்பு மாணவி சாரா அணியினர் 2 ம் இடம் பிடித்தனர்.
வெற்றி பெற்ற இரு அணிகளுக்கும் பதக்கம் மற்றும் பரிசுகளை பள்ளி முதல்வர் கலைவாவணி, தலைமையாசிரியர் தேவி ஆகியோர் வழங்கினர். முதல் இரு இடங்களை பிடித்த அணியினர் மெகா வினாடி வினா போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.