ADDED : செப் 29, 2025 12:53 AM

புவனகிரி: 'தினமலர்' நாளிதழ் பொதுமக்களுக்கு தன்னம்பிக்கை தருகிறது என, புவனகிரி ஸ்ரீ வெள்ளியம்பலம் ஜூவல்லர்ஸ் உரிமையாளரும், வர்த்தக சங்க பொதுச் செயலாளருமான ரத்தின சுப்ரணியர் கூறினார்.
இதுகுறித்து அவர், மேலும் கூறியதாவது:
பவள விழா கொண்டாடும் 'தினமலர்' வாசகர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். பொதுமக்களுக்கு தன்னம்பிக்கை தரும் சிறந்த நாளிதழாக 'தினமலர்' உள்ளது.
அரசியல், ஆன்மிகம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பொதுத் தகவல்களை வாசகர்களுக்கு தினசரி புதுமையாக வழங்கி வருவது பெருமையாக உள்ளது.
குறிப்பாக, அரசியல் செய்தியை துணிச்சலுடன் வெளியிடுவது பாராட்டுக்குரியது. ஆன்மிக மலர், சிறுவர் மலர், வார மலர் என வாரந்தோறும் மூன்று இலவச இணைப்பை வழங்கி அனைவரையும் சிந்திக்க துாண்டுகிறது.
கல்வியாளர்கள் மற்றும் நுாலாசியர்களின் எழுத்து சிந்தனையை ஊக்கப்படுத்தும் நோக்கில் 'படிக்கலாம் வாங்க' என்ற தலைப்பில் புத்தக மதிப்புரை பகுதியை வெளியிட்டு ஊக்கப்படுத்துகிறது. 'தினமலர்' தனது ஊடக சேவையை தேசப்பற்றுடன், நேர்மையாக மேன்மேலும் செய்யும் என்பது நிதர்சனமான உண்மை.