/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'தினமலர்' வித்யாரம்பம்; விருத்தாசலத்தில் கோலாகலம்
/
'தினமலர்' வித்யாரம்பம்; விருத்தாசலத்தில் கோலாகலம்
ADDED : அக் 03, 2025 01:51 AM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் 'தினமலர்' நாளிதழ் சார்பில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச் சியில் ஏராளமான பெற்றோர்கள் ஆர்வத்தோடு பங்கேற்றனர்.
'தினமலர்' நாளிதழின் மா ணவர் பதிப்பு பட்டம் இதழ் மற்றும் இ.கே.சுரேஷ் கல்வி நிறுவனங்கள் சார்பில் விஜயதசமியையொட்டி, வித்யாரம்பம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
அதன்படி, விருத்தாசலம் ஆலிச்சிகுடி சாலையில் உள்ள ஸ்ரீசரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. காலை 7:30 மணி முதலே ஏராளமான பெற்றோர், தங்கள் குழந்தைகளுடன் விழா அரங்கிற்கு குவியத் துவங்கினர்.
டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன், அரசு பொது மருத்துவமனை தலைமை மருத்துவர் சாமிநாதன், இ.கே., சுரேஷ் கல்வி நிறுவன தலைவர் சுரேஷ், பள்ளி தாளாளர் இந்துமதி சுரேஷ், பொருளாளர் அருண்குமா ர், பள்ளி முதல்வர்கள் சக்திவேல், அருணாமேரி ஆகியோர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
காலை 8:30 மணிக்கு குருக்கள் சாய்ராம் சிறப்பு பூஜைகள் செய்தார். சிறப்பு விருந்தினர்கள் குழந்தைகளின் விரலை பிடித்து தானியங்களில் 'அ' னா 'ஆ' வன்னா எழுதி குழந்தைகளின் கல்வி பயணத்தை துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் அரிச்சுவடி எழுதிய குழந்தைகள் அனைவருக்கும் கல்வி உபகரணங்கள் அடங்கிய ஸ்கூல் பேக், அரங்கிலேயே புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ், பிஸ்கட் வழங்கப்பட்டன.
விருத்தாசலம், வடலுார், திட்டக்குடி, பெண்ணாடம், ஸ்ரீமுஷ்ணம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெற்றோர் குழந்தைகளுடன் வந்து, வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
கல்வி நிறுவன தலைவர் சுரேஷ் கூறுகையில்,'தினமலர்' நாளிதழ், டாக்டர் இ.கே.சுரேஷ் கல்வி நிறுவனங்கள் இணைந்து, ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
200க்கும் மேற்பட்ட பெற்றோர், குழந்தைகளுடன் பங்கேற்று மகிழ்வுடன் சென்றனர். அரசு தலைமை மருத்துவர் சுவாமிநாதன், டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று குழந்தைகளின் கல்வி துவக்கத்தை ஆசிர்வதித்தது பெருமகிழ்ச்சி.
இதற்காக 'தினமலர்' நாளிதழுக்கு பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கல்வி நிறுவனம் துவங்கிய இத்தனை ஆண்டுகளில், 'தினமலர்' நாளிதழ் நடத்திய அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக இருந்தது.
குழந்தைகள் தங்களின் முதல்படியை தினமலரு டன் துவங்கி, மென் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். இனி வருங்காலங்களில் 'தினமலர்' நாளிதழின் கல்வி சேவை நிகழ்ச்சி களில் தொடர்ந்து பயணிக் க விரும்புகிறோம்' என்றார்.