ADDED : அக் 03, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த மாமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ஆண்டிப்பாளையம் அம்பேத்கர் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்கள் சிலர், இப்பகுதியில் உள்ள வடிகால் வாய்க்காலை ஆக்கிரமித்து, சாகுபடி செய்து வருகின்றனர்.
இதனால், அம்பேத்கர் தெருவில் மழைநீர் தேங்கி நின்றது. இந்நிலையில், வடிகால் வாய்க்காலில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள், ஊராட்சி நிர்வாகத்திடம் கூறியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து, கிராம மக்கள், வடிகால் வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.
இதற்கு ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து பணியை நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது. இதனால், வாய்க்கால் வெட்டும் பணியை கிராம மக்கள் பாதியிலேயே விட்டு சென்றனர்.