/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நேரடி நெல் சாகுபடி: இணை இயக்குனர் ஆய்வு
/
நேரடி நெல் சாகுபடி: இணை இயக்குனர் ஆய்வு
ADDED : அக் 23, 2024 05:11 AM

கடலுார் : குமராட்சி உள்ளிட்ட பகுதிகளில் நேரடி நெல் சாகுபடியை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் ஆய்வு செய்தார்.
குமராட்சி, காட்டுமன்னார்கோவில், கீரப்பாளையம், புவனகிரி உள்ளிட்ட வட்டாரங்களில் நேரடி நெல் சாகுபடியை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் ஆய்வு செய்தார்.
அப்போது, பயிரின் வளர்ச்சிக்கேற்ப ஒரு ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம் மற்றும் வேப்பம்புண்ணாக்கு 5 கிலோ ஆகியவற்றை நன்றாக கலந்து ஒரு நாள் வைத்திருந்து மறுநாள் 17 கிலோ பொட்டாஷ் உரத்தை கலந்து மேலுரமாக இட விவசாயிளுக்கு பரிந்துரை செய்தார்.
குமராட்சி, கீழக்கரை கிராமத்தில் விவசாயிகளுக்கு நெல் சாகுபடியில் களையெடுப்பு தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனை வழங்கினர். குமராட்சி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தமிழ்வேல், வேளாண்மை அலுவலர் சிந்துஜா உடனிருந்தனர்.