/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலம் மாற்றுத்திறனாளிகள் முகாமில் அதிகாரிகள் அலட்சியம் மயங்கி விழுந்த மாற்றுத்திறனாளிகள்

ADDED : நவ 21, 2024 05:54 AM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் முறையாக ஏற்பாடு செய்யாததால், மாற்றுத்திறனாளிகள் முகாமில் பலரும் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர் தாலுகாவை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம், விருத்தாசலம் அரசு ஆண்கள் பள்ளியில் நேற்று நடந்தது.
மாவட்ட நிர்வாகம் மற்றும் சீட்ஸ், எழுச்சி ஆகிய தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
முடநீக்கியல், காது மூக்கு தொண்டை, மனநலம் உள்ளிட்ட பிரிவுகளில் மருத்துவ வல்லுனர்கள் பரிசோதித்து சான்றுகள் வழங்கும் பணி நடந்தது. இதற்காக, 300க்கும் மேற்பட்ட பயனாளிகள் ஆட்டோ, டாடா ஏஸ் வேன், பைக் உள்ளிட்ட வாகனங்களில் உறவினர்களுடன் வந்திருந்தனர்.
ஆனால், மாற்றுத்திறனாளிகள் வந்து செல்லவும், அவர்கள் பதிவு செய்யவும் அதிகாரிகள் முறையான ஏற்பாடு செய்து தரப்படவில்லை.
இதனால் தாறுமாறாக நிறுத்தியிருந்த வாகனங்களை கடந்து வர முடியாமல், மாற்றுத்திறனாளிகள் மிகுந்த சிரமமடைந்தனர்.
அதுபோல், புதிதாக கட்டிய கலையரங்கில் நான்கு மருத்துவர்களும் பரிசோதனை செய்ததால், கூட்ட நெரிசலில் மாற்றுத்திறனாளிகள் பலர் மயங்கி விழுந்தனர்.
அதிக பாதிப்புடைய மற்றும் நடக்க முடியாத நபர்களை உறவினர்கள் துாக்கிச் செல்ல முடியாமல் சிரமமடைந்தனர்.
பறந்து விரிந்த அரசு மேல்நிலைப் பள்ளியில், நான்கு மருத்துவர்களையும் தனித்தனியே பரிசோதனை செய்திட ஏற்பாடு செய்திருந்தால் நெரிசலை தவிர்த்திருக்கலாம்.
குளறுபடியாக நடந்த முகாமில் எப்படியாவது அடையாள அட்டை பெற வேண்டும் என முண்டியடித்து, மயங்கி கீழே விழுந்து மாற்றுத்திறனாளிகள் அவதிப்பட்ட சம்பவம், பார்ப்போரை கண்கலங்க செய்தது.