/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் தர்ணா
/
கடலுார் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் தர்ணா
கடலுார் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் தர்ணா
கடலுார் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் தர்ணா
ADDED : மார் 28, 2025 05:28 AM

கடலுார்; கடலுார் தாசில்தார் நடத்திய பேச்சுவார்த்தை யில் உடன்பாடு ஏற்பட்டதால் மாற்றுத் திறனாளிகள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
கடலுார் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் கடந்த 2019ல் கடலுார் பகுதி மாற்றுத்திறனாளிகளுக்கு எம்.புதுார் அடுத்த மாவடிப்பாளையத்தில் இலவச வீட்டு மனைபட்டா இடம் ஒதுக்கப்பட்டன.
வருவாய்த்துறை அளந்து ஒதுக்கீடு செய்யாமல் காலம் தாழ்த்தியது. இதனை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் நேற்று காலை கடலுார் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் மதியம் வரை நீடித்ததால், அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது. தாசில்தார் பலராமன் தலைமையில் நடத்திய பேச்சு வார்த்தையில் சங்க நிர்வாகிகள் சையத் முஸ்தபா, முகமது ெஷரீப், அமர்ராஜ், சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மாவடிப்பாளையம் மலைப் பகுதியில் இலவச மனைப்பட்டா வழங்கக் கூடாது என, அரசாணை பிறப்பித்துள்ளது. அதனால் தற்போதைய இடத்தை தர இயலாது. இன்னும் 10 நாட்களில் மாற்றுத்திறனாளிகள் உள்ள பகுதி களிலேயே இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி மொழியளித்தார்.
இதனையேற்று மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.