ADDED : ஆக 26, 2026 04:38 AM

அ நிறம் | அளவு
கடலுார்: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட இணை செ ய லாளர் வசந்தி தலைமை தா ங்கினார். மாநில துணைத் தலைவர் ஆளவந்தார். மாவட்ட இணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், துணைத் தலைவர்கள் ராசையன், அப்துல் அமித் உள்ளிட்டோர் பேசினர்.
விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். கலைச்செல்வன், வட்ட செயலா ளர் ராஜேந்திரன், முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும், பிற மாநிலங்களை போல உத வித்தொகையை 6 ஆயிர மாக உயர்த்தி வழங்கக் கோரி கோஷமிடப்பட்டது.
