ADDED : ஜன 07, 2026 06:01 AM

கடலுார்: கடலுாரில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சட்ட நகல் கிழிப்பு போராட்டம் நடத்தினர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்க புதிய சட்டத்தை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டிப்பதாக கூறி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் கடலுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் சட்ட நகல் கிழிப்பு போராட்டம் நடத்த போராட்டம் நேற்று திரண்டனர்.
இதற்கு புதுநகர் போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஊர்வலமாக தலைமை தபால் நிலையம் அருகில் வந்தனர். பின், நடந்த நகல் கிழிப்பு போராட்டத்தில் ஒன்றிய செயலாளர் வசந்தி தலைமை தாங்கினார்.
மாநகர செயலாளர் அப்துல் ஹமீது முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆளவந்தார், கண்டன உரையாற்றினார். மாவட்ட குழு ரவி, ஜெயலட்சுமி, சிவகாமி, பாவாடைசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

