/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாற்றுத்திறனாளி சங்கத்தினர் முற்றுகை போராட்டம்
/
மாற்றுத்திறனாளி சங்கத்தினர் முற்றுகை போராட்டம்
ADDED : நவ 13, 2025 09:00 PM

விருத்தாசலம்: விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுதிறனாளிகள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முற்றுகை போராட்டம் நடந்தது. மாநில குழு உறுப்பினர் ரவீந்திரன் தலைமை தாங்கினார்.
விருத்தாசலம் வட்ட தலைவர் விமலா, செயலர் ரஹ்மான், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், திட்டக்குடி வட்ட தலைவர் ராஜேந்திரன், செயலர் சுப்ரமணியன், பொருளாளர் பன்னீர்செல்வம், வேப்பூர் வட்ட தலைவர் சக்தி, செயலர் பொன்னுசாமி, பொருளாளர் சங்கீதா மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
இதில், 'ஆந்திர மாநிலத்தில் வழங்கும் உதவிதொகை போல், தமிழகத்திலும் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்; உத்தரவு நகல் பெற்ற மாற்றுதிறனாளிகளுக்கு உடன் மாத உதவி தொகை வழங்க வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தப்பட்டன.

