ADDED : நவ 13, 2025 09:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்டத் தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் புருஷோத்தமன் துவக்க உரையாற்றினார். வட்ட செயலாளர் சிவப்பிரகாசம் விளக்க உ ரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், சிவராமன், குழந்தைவேலு, ராமதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்; 3 சதவீதம் அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

