/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீடு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டோர் விவசாய சங்க ஆலோசனை கூட்டம்
/
வீடு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டோர் விவசாய சங்க ஆலோசனை கூட்டம்
வீடு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டோர் விவசாய சங்க ஆலோசனை கூட்டம்
வீடு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டோர் விவசாய சங்க ஆலோசனை கூட்டம்
ADDED : நவ 13, 2025 09:01 PM

நெய்வேலி: நெய்வேலி வட்டம், 27,ல் என்.எல்.சி.,- பி.எம்.எஸ்., தொழிற்சங்க அலுவலகத்தில்,என்.எல்.சி., நிறுவனத்திற்கு வீடு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டோர் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது.
சிறப்பு தலைவர் வன்னிய ராஜா தலைமை தாங்கினார்.
அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர் மணவாளன், தலைவர் ராம் பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், என்.எல்.சி., இந்தியா நிறுவனத்திற்கு வீடு நிலம் வழங்கிய குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலையும் ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் இழுப்பிடு வழங்க வேண்டும்; ஆர்.ஆர்., பாலிசி 2006 முதல் 2013 வரை உள்ள சட்டத்தினை உடனடியாக அமல்படுத்த வேண்டும்; என்.எல்.சி., நில எடுப்பு துறை வாயிலாக வழங்கப்பட்ட வேலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்; வீடு மற்றும் நிலம் கொடுத்தவர்களுக்கு என்.எல்.சி., சார்பில் வழங்கப்பட்ட மனைக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் செயல் தலைவர் ஆரோக்கியதாஸ், பொதுச்செயலாளர் பரமசிவம், செயலாளர்கள் விஜயன் தவபாலன் பூவராகவன் செல்வகுமார் பாஸ்கர், பொருளாளர் முருகன், அலுவலக செயலாளர் தாண்டவராயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

