/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெய்வேலியில் மாற்றுத்திறனாளிகள் தினம்
/
நெய்வேலியில் மாற்றுத்திறனாளிகள் தினம்
ADDED : டிச 20, 2024 11:22 PM

நெய்வேலி: நெய்வேலியில தேசிய அறிவுசார் மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது.
என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி தலைமை தாங்கினார். நெய்வேலி சினேகா வாய்ப்பு சேவைகள் அமைப்பின் தலைவர் ராதிகா பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி துவக்கி வைத்தார். சினேகா வாய்ப்பு சேவைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் விஜயகுமாரி ஆண்டறிக்கை வாசித்தார். என்.எல்.சி., மக்கள் தொடர்புத்துறை பொது மேலாளர் கல்பனா தேவி வரவேற்றார். என்.எல்.சி., மனித வளத்துறை இயக்குநர் சமீர் ஸ்வரூப் முன்னிலை வகித்தார்.
என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி பேசுகையில், நெய்வேலி நகரத்திற்கு வெளியே உள்ள மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு போக்குவரத்தை எளிதாக்குவதை உறுதி செய்யும் வகையில், 2025 ஜனவரி 1 முதல் பள்ளி மாணவர்களுக்காக இலவச சிறப்பு பஸ் சேவை தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சினேகா வாய்ப்பு சேவைகள் குழந்தைகளுக்கு, தற்போது கிடைக்கும் வசதிகளான அதிநவீன கணினி ஆய்வகம், மதிய உணவுத் திட்டம் மற்றும் உயர்தர சேவைகள் போன்றவற்றுடன், இந்த சிறப்பு பஸ் சேவை திட்டம் கூடுதலான பலனளிக்கும் என்றார்.
என்.எல்.சி., நகர நிர்வாக முதன்மை பொது மேலாளர் சிந்துபாபு நன்றி கூறினார்.

