/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி
/
கடலுாரில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி
ADDED : செப் 05, 2025 03:17 AM

கடலுார்: புவனகிரி அடுத்த சின்னுாரில் (தெற்கு) சுனாமி மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
சுனாமி பேரிடர் மீட்பு ஒத்திகை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நடந்த ஒத்திகையில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
பின், அவர் கூறுகையில், 'சுனாமி, புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர் ஏற்படும் போது, அதனை எதிர்கொள்ளவும், குறிப்பிட்ட நேரத்திற்குள் மீட்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் ஒத்திகை நிகழ்ச்சி நடத்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, கடலுார் அடுத்த சொத்திக்குப்பம், புவனகிரி அடுத்த சின்னுார் (தெற்கு) மீன் இறங்கு தளம் ஆகிய இடங்களில் சுனாமி மாதிரி ஒத்திகை நடந்தது.
பேரிடர் ஒத்திகை தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை ஒத்திகை நடைபெறும் இடங்களில் வாக்கி டாக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது' என்றார்.
ஒத்திகை நிகழ்ச்சியில் இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும் மக்களை எப்படி மீட்பது, எவ்வாறு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்வது குறித்தும், மீட்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளித்தல் மற்றும் அவசர ஊர்தி மூலம் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்வது குறித்து ஒத்திகை பார்க்கப்பட்டது.
டி.ஆர்.ஓ., ராஜசேகரன், நேர்முக உதவியாளர் ரவி உடனிருந்தனர்.
இதேப் போன்று, சொத்திக்குப்பத்தில் ஆர்.டி.ஓ., அபிநயா முன்னிலையில் மாதிரி ஒத்திகை நடந்தது. தாசில்தார் மகேஷ் உடனிருந்தார்.