/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் பல்கலையில் கலந்துரையாடல் நிகழ்ச்சி
/
சிதம்பரம் பல்கலையில் கலந்துரையாடல் நிகழ்ச்சி
ADDED : டிச 13, 2024 06:31 AM

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதுார மற்றும் இணைய வழி கல்வி மையம் சார்பில், 2024-- 25 கல்வியாண்டில் பயிலும் மாணவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
கல்வி மைய இயக்குனர் சீனிவாசன் வரவேற்றார். துணைவேந்தர் குழு உறுப்பினர் அருட்செல்வி துவக்க உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக சுரேஷ், சுந்தர்பங்கேற்று, தொலைதுார கல்வியில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பிலும், தொலைதுார கல்வியின் போக்குகள் குறித்தும் உரையாற்றினர் தொலைதுார மற்றும் இணைய வழி கல்வி மைய இணை இயக்குநர் விஜயன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் மாணவர்கள், புல முதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், பி.ஆர்.ஓ., ரெத்தின சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.