நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: பல்லவராயநத்தம் கிராம சமைப கூட்டத்தில், வேளாண் கல்லுாரி மாணவர்கள் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடத்தினர்.
திருவண்ணாமலை வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மாணவர்கள், பாலுார் காய்கறி ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண்மை பயிற்சி பெற்று வருகின்றனர். ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் விஜய் செல்வராஜ், கமலகண்ணன், அறிவிகரசு வழிகாட்டுதலில், வேளாண் மாணவர்கள் பல்லவராயநத்தம் ஊராட்சியில் நடந்த கிராமசபைக்கூட்டத்தில் நேற்று பங்கேற்று கலந்துரையாடல் நடத்தினர்.
விவசாயிகள் எதிர்கொள்ளும் வேளாண் பிரச்சினைகள் குறித்து தகவல்கள் சேகரித்தனர். கிராம சபை கூட்டத்தில் வேளாண்மை மாணவர்கள் ரிதோஷ், சம்பத், சரவணன், செல்வகுமார், சத்தியராஜ், சோம்தத், சந்தோஷ், சிவராஜ், ஸ்ரீகாந்த், ஸ்ரீநிவாசன், சுயாஷ், சுபம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

