/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பயிர்களில் நோய் தாக்குதல் : வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு
/
பயிர்களில் நோய் தாக்குதல் : வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு
பயிர்களில் நோய் தாக்குதல் : வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு
பயிர்களில் நோய் தாக்குதல் : வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு
ADDED : டிச 08, 2025 06:01 AM

சேத்தியாத்தோப்பு: சம்பா நடவு நெற்பயிர்களில் பூச்சி நோய் தாக்குதலுக்குள்ளான, வயல்களில் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கீரப்பாளையம் வட்டாரத்தில்,பருவ நிலை மாற்றம் காரணமாக ஆயிப்பேட்டை,சாக்காங்குடி, அய்யனுார், அக்கராமங்கலம், விளாகம் மற்றும் சுற்றியுள்ள கிராம வயல்வெளிகளில், சம்பா நடவு நெற்பயிர்களில் பூச்சி நோய் தாக்குதல் குறித்த வேளாண் விஞ்ஞானிகளின் ஆய்வு நடந்தது.
விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் நடராஜன் மற்றும் கீரப்பாளையம் வேளாண் உதவி இயக்குனர் சிவப்பிரியன் தலைமையில் ஆய்வு நடந்தது. இதில், தற்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் இலை கருகல் நோய் சில இடங்களில் தென்படுவதால் நெற்பயிர் இலைகள் மஞ்சள் பழுப்பு நிறத்தில் காணப்படும்.
இதனை கட்டுப்படுத்துவதற்கு ஸ்ட்ரேப்டோமைசின் சல்பேட் மற்றும் டெட்ராசைக்கிளின் ஹைட்ரோகுளோரைட் (9;10 எஸ்.பி., ) 20 கி., கலவையுடன் காப்பர் ஆக்ஸிகுளோரைட் 200 கி., என்ற அளவில் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து பேட்டரி ஸ்பிரேயர் மூலம் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
மேலும் இலை சுருட்டு புழு தாக்குதலை கட்டுப்படுத்த ஹார்ப் ஹைட்ரோ குளோரைட் 75 சதவீதம் எஸ்.ஜி., 250 கிராம் என்ற அளவில் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்கலாம் என, விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
இந்த நிகழ்வில், வேளாண் உதவி அலுவலர்கள் திவாகர், வெங்கடேசன் உள்ளிட்டோர், உடனிருந்தனர்.

