/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலில் தகராறு; 3 பேர் மீது வழக்கு
/
கடலில் தகராறு; 3 பேர் மீது வழக்கு
ADDED : மே 27, 2025 11:06 PM
கிள்ளை; கிள்ளை அருகே கடலில் மீன் பிடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கிள்ளை அடுத்த பொன்னந்திட்டு ஆரிய நாட்டு தெருவை சேர்ந்தவர் சுதாகர், 34; இவர், தனது தம்பி சுமன், ரங்கநாதன் ஆகியோருடன் நேற்று முன்தினம் பைபர் படகில் எம்.ஜி.ஆர்., திட்டு அருகே கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தார்.
அப்போது, பரங்கிப்பேட்டை அடுத்த சி.புதுப்பேட்டையைச் சேர்ந்த மருது, மதன், செல்வம் ஆகியோர் சென்ற படகில் சுதாகரின் மீன்பிடி விலை சிக்கிக் கொண்டது. இதனை தட்டிக் கேட்ட சுதாகரையும், தடுக்க வந்த சுமன், ரங்நதாதனையும் மருது மற்றும் அவரது தரப்பினர் தாக்கினர்.
புகாரின் பேரில், கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து, மருது, மதன், செல்வத்தை தேடி வருகின்றனர்.

