/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மருத்துவ காப்பீடு முகாம் பயனாளிகள் அதிருப்தி
/
மருத்துவ காப்பீடு முகாம் பயனாளிகள் அதிருப்தி
ADDED : அக் 26, 2024 06:51 AM

வேப்பூர்: நல்லுாரில் முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட மருத்துவ முகாம் நடந்தது.
வேப்பூர் வருவாய் ஆய்வாளர் ராஜவேல் தலைமை தாங்கினார். வேப்பூர் தாசில்தார் மணிகண்டன் முகாமை துவக்கி வைத்தார். மருத்துவ காப்பீடு திட்ட மாவட்ட அலுவலர் மணிகண்டன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் சசிதரன், சம்சத்பேகம், வி.ஏ.ஓ.,க்கள் அருண், ரவி, ராகுல், தமிழ்ச்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யாத பயனாளிகள் தங்களது ரேஷன் மற்றும் ஆதார் அட்டையுடன் வந்து பதிவு செய்தனர்.
இதனிடையே மருத்துவ முகாம் குறித்து கிராமங்களில் முறையாக அறிவிக்கவில்லை. முகாம் நாளான நேற்று பகல் 11:00 மணிக்கு மேல் முகாம் நடப்பதாக கிராம மக்களுக்கு அறிவித்தனர். முகாம் வளாகத்தில் குடிநீர், இருக்கை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், பயனாளிகள் அதிருப்தி அடைந்தனர்.