/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தொலைதுார கல்வி சேர்க்கை: விண்ணப்பிக்க அவகாசம்
/
தொலைதுார கல்வி சேர்க்கை: விண்ணப்பிக்க அவகாசம்
ADDED : செப் 05, 2025 03:34 AM
சிதம்பரம்:சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழக தொலைதுாரக் கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதுாரம் மற்றும் இணையவழிக் கல்வி மையம் சார்பில் 5 இளங்கலை மற்றும் 20 முதுகலைப் பட்டப்படிப்புகள் நடத்தப்படுகிறது.
மேலும் 12 பட்டயப் படிப்புகள், 6 சான்றிதழ் படிப்புகள் மற்றும் 80 தரச் சான்றிதழ் படிப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது.தற்போது மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாணவர் சேர்க்கை அக்., 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. www.audde.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.