/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., துண்டு பிரசுரம் வழங்கல்
/
அ.தி.மு.க., துண்டு பிரசுரம் வழங்கல்
ADDED : ஏப் 25, 2025 05:24 AM

பண்ருட்டி: பண்ருட்டியில் தமிழக அரசின் பட்ஜெட்டை கண்டித்து அ.தி.மு.க., வினர் துண்டு பிரசுரம் வழங்கினர்.
பண்ருட்டியில் நகர அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில் தமிழக அரசின் பட்ஜெட்டை கண்டித்து துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நகர ஜெ., பேரவை செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். நகர செயலாளர் மோகன் வரவேற்றார்.
மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் கனகராஜ், இணை செயலாளர் கார்த்திக், மாவட்ட விவசாய அணி செயலாளர் கலையரசன், முன்னாள் எம்.எல்.சி., சிவராமன், நகர அவை தலைவர் ராஜதுரை, பொருளாளர் முருகன், இணை செயலாளர் சத்யா கலைமணி, துணை செயலாளர்கள் உமாமகேஸ்வரி ஸ்ரீதர், ரகுபதி, மாவட்ட பிரதிநிதி சீனுவாசன், சர்புதீன், சலாவுதீன் உடனிருந்தனர்.