/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலம் நகராட்சி பள்ளிகளில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
/
விருத்தாசலம் நகராட்சி பள்ளிகளில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
விருத்தாசலம் நகராட்சி பள்ளிகளில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
விருத்தாசலம் நகராட்சி பள்ளிகளில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
ADDED : ஜூலை 03, 2025 11:21 PM

விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு 'தினமலர் - பட்டம்' இதழை நகர்மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் வழங்கினார்.
பள்ளி மாணவ, மாணவிகளின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தற்போதைய தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்ட அறிவியல் தகவல்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில், 'தினமலர் - பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் என 12 பள்ளிகளுக்கு, விருத்தாசலம் நகராட்சி நிர்வாகம் சார்பில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு விருத்தாசலம் தென்கோட்டை வீதி, நகராட்சி நடுநிலைப் பள்ளியில், நேற்று 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி கமிஷனர் பானுமதி, பொறியாளர் பிரபாகரன், நகரமைப்பு அலுவலர் செல்வம் முன்னிலை வகித்தனர்.
தலைமை ஆசிரியர் வள்ளி வரவேற்றார். நகர்மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் துவக்கி வைத்தார். அப்போது, காலை உணவு திட்டம், மதிய சத்துணவு, முட்டை உள்ளிட்ட உணவுகள் மற்றும் குடிநீர், கழிவறை வசதிகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான ஆயத்த மையத்தில் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களிடம் கலந்துரையாடினார். பள்ளிக்கு சுற்றுச்சுவர் தேவை என்ற ஆசிரியர்களின் கோரிக்கையை விரைவில் நிறைவேற்றுவதாக நகர்மன்ற தலைவர் உறுதியளித்தார்.
ஆசிரியர் சாந்தி, பிசியோதெரபிஸ்ட் எழில்முருகன், மாற்றுத்திறன் சிறப்பு பயிற்சியாளர் ராஜேஸ்வரி உடனிருந்தனர்.