/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பேரிடர்கால முன்னெச்சரிக்கை துண்டு பிரசுரங்கள் வழங்கல்
/
பேரிடர்கால முன்னெச்சரிக்கை துண்டு பிரசுரங்கள் வழங்கல்
பேரிடர்கால முன்னெச்சரிக்கை துண்டு பிரசுரங்கள் வழங்கல்
பேரிடர்கால முன்னெச்சரிக்கை துண்டு பிரசுரங்கள் வழங்கல்
ADDED : அக் 14, 2025 07:29 AM

கடலுார்; கடலுார் பெண்ணையாற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பேரிடர்கால முன்னெச்சரிக்கை குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
சாத்தனுார் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் அணை நிரம்பி, உபரி நீர் பெண்ணையாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடலுார் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள கொமந்தான்மேடு தரைப்பாலம் மூழ்கியபடி பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கரையோர வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், பெண்ணையாற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் திடீர்குப்பம், தட்சிணாமூர்த்தி நகர், புருஷோத்தமன் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வி.ஏ.ஓ., சுந்தர்ராஜ் வழங்கினார். கிராம உதவியாளர் பரமசிவம், ரியல் சமூக சேவை நிறுவனம் ராதிகா, மாலதி உடனிருந்தனர்.