ADDED : அக் 14, 2025 07:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி; புவனகிரி அருகே வீச்சரிவாளுடன், பொதுமக்களை அச்சுறுத்திய ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் - சிதம்பரம் சாலையில் புவனகிரி அருகே தம்பிக்கு நல்லான்பட்டினம் பகுதியில் சிலர் கையில் உருட்டுக்கட்டை, வீச்சரிவாளுடன் சாலையில் சுற்றி திரிந்து, பொதுமக்களையும் அச்சுறுத்தியது குறித்து புவனகிரி போலீசாருக்கு புகார் சென்றது.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது, போலீசாரை கண்டதும் சிலர் அங்கிருந்து ஓடினர்.
இதில் ஒருவரை பிடித்து விசாரித்ததில் கீழ் புவனகிரியை சேர்ந்த கணேசன்,33; என்பது தெரிய வந்தது.
மேலும், தப்பி ஓடிய தம்பிக்கு நல்லான்பட்டினத்தை சேர்ந்த மோகன், சபாநாயகம், மணிகண்டன் ஆகிய மூவரை தேடி வருகின்றனர்.