ADDED : அக் 28, 2024 05:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை : தீபாவளி பண்டிகையையொட்டி, கிள்ளை அடுத்த குமாரமங்கலம் மற்றும் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு சிதம்பரம் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் சார்பில், பட்டாசு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் ஞானகுமார் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு பட்டாசு வழங்கினார். விழாவில், தலைமை ஆசிரியர்கள் ஸ்ரீதர், பானுமதி மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். கார்த்திக் ராஜா நன்றி கூறினார்.