/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதியோர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கல்
/
முதியோர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கல்
ADDED : ஜன 15, 2024 06:56 AM

காட்டுமன்னார்கோவில் : குமராட்சி அருகே முதியோர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
தமிழக அரசு அறிவித்த பொங்கல் தொகுப்பு மற்றும் பணம், கைரேகை பெற்று வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், முதியோர், ஊனமுற்றோர் என பலர் நேரடியாக ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதனை கருத்தில் கொண்டு, கடலுார் மாவட்டம், குமராட்சி அடுத்த வெள்ளூர் கிராம ரேஷன் கடை விற்பனையாளர் நடனசபாபதி, கிராமத்தில் உள்ள முதியோர்கள் மற்றும் உடல் நலம் குன்றி வீட்டிலேயே முடங்கியவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, கைரேகை பெற்று, அரசின் பொங்கல் தொகுப்பை வழங்கினார். அவரது சேவையை கிராம மக்கள் பாராட்டினர்.