/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மீண்டும் மழைநீர் சேகரிப்பு திட்டம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை தேவை
/
மீண்டும் மழைநீர் சேகரிப்பு திட்டம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை தேவை
மீண்டும் மழைநீர் சேகரிப்பு திட்டம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை தேவை
மீண்டும் மழைநீர் சேகரிப்பு திட்டம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை தேவை
ADDED : மே 22, 2025 11:33 PM
மந்தாரக்குப்பம்:மாவட்டத்தில் கிணறு, ஏரிகள், ஆழ்துளை குழாய்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் மீண்டும் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலுார் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் வெயில் காரணமாக பொதுமக்களின் தண்ணீர் தேவை பலமடங்கு அதிகரித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெ., ஆட்சியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக தனியார் கட்டடங்கள் மற்றும் வீடுகள் அரசு அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தினார். கடந்த காலங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தியதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து இருந்தது. காலநிலை மாற்றத்தால் பருவ மழை குறிப்பிட்ட இடங்களில் அதிகமாகவும், பல பகுதிகளில் குறைவாகவும் பெய்கிறது.
தற்போது மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முறையாக செயல்படுத்தாமால் இருப்பதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டு செல்கிறது. அரசு அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்புக்காக அமைக்கப்பட்ட குழாய்கள், தொட்டிகள் சேதமடைந்து காணப்படுகின்றன. எனவே மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.