/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விநாயகர் சிலைகள் வைக்க மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு:ரசாயன வண்ணங்களை தவிர்க்க அறிவுறுத்தல்
/
விநாயகர் சிலைகள் வைக்க மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு:ரசாயன வண்ணங்களை தவிர்க்க அறிவுறுத்தல்
விநாயகர் சிலைகள் வைக்க மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு:ரசாயன வண்ணங்களை தவிர்க்க அறிவுறுத்தல்
விநாயகர் சிலைகள் வைக்க மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு:ரசாயன வண்ணங்களை தவிர்க்க அறிவுறுத்தல்
ADDED : ஆக 29, 2024 07:32 AM
விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 7ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி, கடலுார் மாவட்டத்தில் பல இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பது மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பிரதிஷ்டை செய்து வழிபடுவது, ஊர்வலம், நீர் நிலைகளில் பாதிப்பு ஏற்படாத நிலையில் கரைக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. சிலைகளை கரைக்க மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் உரிமையாளரின் அனுமதியும், அரசுக்கு சொந்தமான இடமாக இருந்தால் சம்பந்தப்பட்ட துறையில் அனுமதியும் பெறுவது அவசியம், ஒலி பெருக்கி பயன்படுத்தினால் காவல்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும். ஒலிபெருக்கி டெசிபல் அளவினை குறைத்து பயன்படுத்த வேண்டும் .
முக்கியமாக, 10 அடிக்கு மேல் உள்ள விநாயகர் சிலைகளை நிறுவுவதையும் மசூதிகள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு அருகில் சிலை வைப்பதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் எனவும், காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக, விநாயகர் சதுர்த்தி விழா குழவினருடன், ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் ஆலோசனை கூட்டங்கள் நடத்த எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், களிமண்ணால் செய்யப்பட்டதும், பிளாஸ்டர் ஆப்பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலவையற்றதுமான பொருள்களால் மட்டுமே விநாயகர் சிலைகளை செய்ய வேண்டும். சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர்கள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தலாம். சிலைகளைபளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தலாம். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் ெதர்மாக்கோல் பொருட்களை தவிர்க்க வேண்டும். சிலைகளுக்கு வண்ணம் பூசுவதற்கு ரசாயன கலவைகளை பயன்படுத்தக்கூடாது. இயற்கை சாயங்களை பயன்படுத்த வேண்டும்.
மேலும், மாவட்ட நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டுள்ள கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரை, கொள்ளிடம் ஆறு மற்றும் வெள்ளாறு, உப்பனாறு ஆகிய நீர்நிலைகளில் மட்டுமே கரைக்கஅனுமதிக்கப்படும். எனவே, விநாயகர் சதுர்த்தி விழா அமைதியான முறையில் கொண்டாட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என, கேட்டுக்கொண்டுள்ளார்.