/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்ட கிரிக்கெட் போட்டி: 16 அணிகள் பங்கேற்பு
/
மாவட்ட கிரிக்கெட் போட்டி: 16 அணிகள் பங்கேற்பு
ADDED : ஜன 15, 2024 06:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி, கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் துவங்கியது.
துவக்க விழாவில், சங்க மாவட்ட தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.
ராமேஸ்வரன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட விளையாட்டு அதிகாரி மகேஷ் குமார் போட்டியை துவக்கி வைத்தார்.
போட்டியில் கடலுார், நெல்லிக்குப்பம், பண்ருட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 16 அணிகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.போட்டிகள் வரும் 20ம் தேதி வரை நடக்கிறது.
ஏற்பாடுகளை சங்க செயலாளர் கூத்தரசன் செய்துள்ளார்.