sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மத்திய அரசைக் கண்டித்து மாவட்ட தி.மு.க., ஆர்ப்பாட்டம்

/

மத்திய அரசைக் கண்டித்து மாவட்ட தி.மு.க., ஆர்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து மாவட்ட தி.மு.க., ஆர்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து மாவட்ட தி.மு.க., ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 30, 2025 04:38 AM

Google News

ADDED : மார் 30, 2025 04:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் தமிழகத்திற்கு நிதி தராத மத்திய அரசை கண்டித்து கடலுார் மாவட்டத்தில் தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கடலுார்: வரக்கால்பட்டில் அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் விஜயசுந்தரம், தலைமை செயற்குழு உறுப்பினர் விக்கிரமன் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சி தலைவர் மனோகர், முத்து, முன்னாள் நிலவள வங்கி தலைவர் ராமலிங்கம், முன்னாள் கவுன்சிலர் உமா பாஸ்கர், முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் சாந்திபழனிவேல், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததார் ராஜசேகர், நிர்வாகிகள் ஜோதி, பரத், சலீம், மணிமாறன், கவாஸ்கர், சுந்தரமூர்த்தி, ரவிராஜ், பழனி, பாலு, சுதாகர் பங்கேற்றனர்.

சிதம்பரம்: குமராட்சி கிழக்கு ஒன்றியம் சார்பில் விபீஷ்ணபுரத்தில் மாவட்ட பொருளாளர் கதிரவன் தலைமையில், ஒன்றிய செயலாளர் சங்கர், அண்ணாமலை நகர பேரூராட்சி தலைவர் பழனி, மாவட்ட ஆதிராவிட நலக்குழு அமைப்பாளர் பரந்தாமன், ஒன்றிய அவைத்தலைவர் கிருஷ்ணசாமி, பொருளாளர் பாலகுரு, செயலாளர் ரேவதி இளவரசன், தகவல் தொழில்நுட்ப அணி பாலமுருகன், மாவட்ட பிரதிநிதி அம்பிகா, இளைஞரணி ரவிக்குமார் பங்கேற்றனர்.

விருத்தாசலம்: கோமங்கலம் கிராமத்தில், ஒன்றிய செயலாளர் கனக கோவிந்தசாமி தலைமையில் விருத்தாசலம் நகர செயலாளர் தண்டபாணி, மாநில இலக்கிய அணி துணை செயலாளர் கலைச்செல்வன், மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் அருள்குமார், ஒன்றிய துணை செயலாளர் தர்ம மணிவேல், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரவிச்சந்திரன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் வெங்கடேசன், ஒன்றிய துணை செயலாளர்கள் கோவிந்தராசு, ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் சிவக்குமார், மதியழகன், பாலகிருஷ்ணன், கிளை செயலாளர் மணிகண்டன் பங்கேற்றனர்.

ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வசந்தகுமார் நன்றி கூறினார்.

அண்ணாகிராமம்: ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் தலைமையில், முன்னாள் ஒன்றிய செயலாளர் பலராமன் பலர் பங்கேற்றனர்.

சி.என்.பாளையம்: ஒன்றிய துணை செயலாளர் ராஜேந்திரன் தலைமையில், மாவட்ட விவசாய சங்க தலைவர் வைத்திலிங்கம், மாவட்ட பிரதிநிதி ஞானசகேரன், விவசாய சங்க ஒன்றிய துணை அமைப்பாளர் பாண்டுரங்கன், இலக்கிய அணி வேல்முருகன், காட்டுமன்னார்கோவில் ஒன்றிய துணை செயலாளர் பாஸ்கர், இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்குமார்,துணை அமைப்பாளர் சந்திரமோகன் பங்கேற்றனர்.

கிள்ளை: சி.முட்லுார் அரசு கலைக் கல்லுாரி அருகில் புவனகிரி கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் டாக்டர் மனோகர் தலைமையில், நடந்த ஆர்ப்பாட்டடத்தில் ஒன்றிய அவைத் தலைவர் மாறன், பொதுக்குழு உறுப்பினர் வெற்றிவேல். ஊராட்சி செயலர்கள் கோகுலக்கண்ணன், ராஜி, கலைச்செல்வன், வரதராஜன், மணிமாறன், நிர்வாகிகள் மகாலிங்கம், சதாசிவம், சஞ்சய், அரவிந்தன், வினோத், அருண், நடராஜ் பங்கேற்றனர். பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியம் தில்லைவிடங்கன் ஊராட்சி பெரியமதகில் ஒன்றிய தி.மு.க., செயலாளர் கலையரசன் தலைமையில், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் ஜாபர் அலி, ஒன்றிய துணை செயலாளர் செல்வகுமாரி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மோகன்தாஸ், பேரூராட்சி கவுன்சிலர் பாண்டியன், ஒன்றிய இளைஞரணி அன்புச்செல்வன், நிர்வாகிகள் மாரிமுத்து, ரவி, மஸ்தான், சிவலோகம், நீலமேகம், சலீம், ஜெயசித்ரா பங்கேற்றனர்.

அழிச்சிக்குடி: ஆத்மா திட்ட இயக்குனர் சாரங்கபாணி தலைமையில் முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் இளையராஜா, முன்னாள் கவுன்சிலர் கார்த்திகேயன், இளைஞரணி துணை அமைப்பாளர் கவுதமன் பங்கேற்றனர்.

பெண்ணாடம்: தெற்கு ஒன்றிய செயலாளர் சிவதியாகராஜன் தலைமையில் முன்னாள் ஒன்றிய செயலாளர் கோதண்டபாணி, மாவட்ட பொறியாளர் அணி செம்பியன், அவைத்தலைவர் ஜெயராமன், மாவட்ட பிரதிநிதிகள் இளவரசன், வேல்முருகன, கிளை செயலாளர் அழகுவேலன் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us