/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்ட அளவிலான தடகள போட்டி சிதம்பரத்தில் 6ம் தேதி துவக்கம்; இன்று மாலைக்குள் பதிவு செய்ய அறிவுறுத்தல்

ADDED : செப் 04, 2025 02:42 AM
கடலுார் : கடலுார் மாவட்ட அளவிலான பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கான ஏழாவது ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், வரும் 6ம் தேதி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் நடக்கிறது.
கடலுார் மாவட்ட தடகள கழகம் மற்றும் ஏ.பி.சி.,ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து நடத்தும் ஏழாவது ஜூனியர் தடகள் சாம்பியன்ஷிப் போட்டிகள், அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் செப்.6ம் தேதி நடக்கிறது. அதில் 14வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ட்ரையத்லான், கிட்ஸ் ஜாவலின் போட்டிகள் நடக்கிறது.
16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 60மீ., 80மீ., தடைதாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் போட்டிகள் நடக்கிறது. 18வயதுக்குட்பட்டோர் பிரிவில் 100மீ., 200மீ., 400மீ., ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் போட்டிகள் நடக்கிறது.
20வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 100மீ., 200மீ., 400மீ., 800மீ., 1500மீ., ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகள் நடக்கிறது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படுகிறது.
கடலுார் மாவட்ட தடகள கழகத்தின் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் இத்தகவலை தெரிவித்துள்ளனர். போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் செப்.4ம் தேதி (இன்று) மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.