ADDED : செப் 27, 2026 10:34 PM
சிதம்பரம்: ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கடலுார் மாவட்ட அளவிலான, 19ம் ஆண்டு ரோலர் ஸ்கேட்டிங் போட்டி முள்ளோடை மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் நடந்தது.
இதில் கடலுார், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, விருத்தாசலம், காடாம்புலியூர், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில், ஸ்கேட்டிங் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள் 480 பேர் பங்கேற்றனர்.
பேசிக், பேன்சி இன்லைன், ஸ்குவாட், இன்லைன் என, 4 பிரிவிகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் சங்க செயலாளர் நடராஜன் தலைமையில் நடத்தப்பட்ட இப்போட்டியை, பயிற்சியாளர்கள் ராஜசேகர், சத்யா, பிரியாவேல்,முருகன், சதீஷ், பிரபு கணேஷ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். 3 வயது முதல் 18 வயது வரையிலான பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
