தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ எம்.ஆர்.கே. கல்லுாரியில்  என்.எஸ்.எஸ்., தின விழா 

எம்.ஆர்.கே. கல்லுாரியில்  என்.எஸ்.எஸ்., தின விழா 

எம்.ஆர்.கே. கல்லுாரியில்  என்.எஸ்.எஸ்., தின விழா 


ADDED : செப் 27, 2026 10:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 10:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே. இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லுாரியில் நாட்டு நலப்பணித் திட்ட தினத்தையொட்டி கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடந்தது.

கல்லுாரி தலைவர் கதிரவன் தலைமை தாங்கினார். நிர்வாக அதிகாரி கோகுலக்கண்ணன், மேலாளர் விஸ்வநாத் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பிரபு வரவேற்றார்.

கல்லுாரி முதல்வர் முனைவர் ஆனந்தவேலு பேசுகையில், ‘நாட்டு நலப்பணித் திட்டத்தின் இலச்சினையானது ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோணார்க் சூரியக் கோவிலில் தேர் சக்கரத்தை  அடிப்படையாகக் கொண்டது. மாணவர்கள் கல்லுாரியில் பயிலும் காலத்திலேயே சமூக பணிகளில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள நாட்டு நலப்பணித் திட்டம் சிறந்த வாய்ப்பாகும்’ என்றார். 

மாணவர்களிடையே பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில கட்டுரை போட்டிகளும், பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைக்கும் வகையில் ஓவியப் போட்டிகளும் நடந்தது. விழாவை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சித்தி விநாயகம் ஒருங்கிணைத்தார்.

நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஹரிஹரன், மணிபாரதி ஆகியோர், சக நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுடன் இணைந்து நாட்டு நலப்பணித் திட்ட உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

மாணவி சந்தியா நன்றி கூறினார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us