ADDED : செப் 27, 2026 10:34 PM
அ நிறம் | அளவு
வடலூர்: வடலுார் சபை பெருவெளியில் முதியவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வடலுார் சத்திய ஞான சபை அருகே பரந்த பெருவெளி அமைந்துள்ளது. இங்குள்ள மரத்தடி நிழல் பகுதிகளில் ஏராளமான ஆதரவற்றோர் மற்றும் முதியோர் தங்கி, தரும சாலையில் உண்டு வாழ்ந்து வருகின்றனர். இங்கு நேற்று அதிகாலை சர்வதேச மையம் அமைப்பதற்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்களை சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்பில், முதியவர் ஒருவர் துாக்கிட்ட நிலையில் இருந்தது தெரிய வந்தது.
தகவலறிந்த வடலுார் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்ததில் இறந்த நபர் கருப்பன் மகன் ராமர், 67; என தெரிய வந்தது.
சடலத்தை குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய வடலுார் போலீசார், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
