ADDED : செப் 27, 2026 10:34 PM
அ நிறம் | அளவு
குள்ளஞ்சாவடி: மகள் மாயமானது குறித்து தாய் போலீசில் புகார் அளித்தார்
குள்ளஞ்சாவடி அடுத்த சின்னதானங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகள் மகாலட்சுமி, 23; நேற்று மதியம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தனது பெற்றோருக்கு மொபைல் போனில் தொடர்பு கொண்ட மகாலட்சுமி, தான் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறி அழைப்பை துண்டித்துள்ளார்.
இதையடுத்து அவரது தாய் வனமயில், குள்ளஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
