/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கருணாநிதி நினைவு நாள் மாவட்ட செயலாளர் அழைப்பு
/
கருணாநிதி நினைவு நாள் மாவட்ட செயலாளர் அழைப்பு
ADDED : ஆக 06, 2025 08:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுபாக்கம் : முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, தி.மு.க., வினர் நலத்திட்ட உதவிகள் வழங்க கடலுார் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் கணேசன் அறிவுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
கடலுார் மேற்கு மாவட்ட தி.மு.க., வில் நாளை 7ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.
இதில், மாவட்ட நிர்வாகிகள், நகர, பேரூர், ஒன்றிய, வார்டு, கிளை செயலாளர்கள், முன்னாள், இன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.