/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தீபாவளி பண்டிகை எதிரொலி கடலுார் சாலைகள் 'வெறிச்'
/
தீபாவளி பண்டிகை எதிரொலி கடலுார் சாலைகள் 'வெறிச்'
ADDED : நவ 01, 2024 06:10 AM

கடலுார்: தீபாவளி பண்டிகையொட்டி கடலுார் மாவட் டத்தில் வாகன போக்கு வரத்தின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கடலுார் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் மருந்தகம், பால் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. சுவீட்ஸ் கடைகள், சிறிய பெட்டிக் கடைகள், டீக்கடைகள் வழக்கம் போல் திறக்கப்பட்டிருந்தன.
அரசு மற்றும் தனியார் பஸ்கள் போதிய அளவில் இயக்கப்படாமல் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டன. ஓரிரு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதில், குறைந்த எண்ணிக்கையிலேயே பயணிகள் பயணித்தனர்.
பஸ்கள், பயணிகள் நடமாட்டமன்றி கடலுார் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டன. ஆட்டோக்களும் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டன.
போக்குவரத்துக்கு பிரதானமான கடலுார் - பண்ருட்டி, கடலுார் -சிதம்பரம், கடலுார் - புதுச்சேரி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.