/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தே.மு.தி.க., நிர்வாகி விபத்தில் பலி
/
தே.மு.தி.க., நிர்வாகி விபத்தில் பலி
ADDED : அக் 20, 2024 05:25 AM
வேப்பூர் : நடந்து சென்ற முதியவர் மீது ஸ்கூட்டி மோதியதில் தே.மு.தி.க., நிர்வாகி இறந்தார்.
வேப்பூர் அடுத்த சேப்பாக்கத்தைச் சேர்ந்தவர் பாபு ஜெகஜீவிராமன், 48. தே.மு.தி.க., தொழிற்சங்க அணி மாவட்ட துணை செயலாளர். இவர், நேற்று முன்தினம் இரவு ஹோண்டா ஸ்கூட்டியில் வேப்பூரிலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
இரவு 8:30 மணியளவில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் கூட்டுரோடு அருகே சென்ற போது, எதிரே நடந்து வந்தவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
அதில், பாபு ஜெகஜீவிராமன், 48, அதே இடத்தில் இறந்தார். காயமடைந்த சேப்பாக்கத்தைச் சேர்ந்த நீலமேகம், 65, வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.